நடிகை சமந்தா இரண்டாவது திருமணம்... வைரலாகும் ட்விட்டர் பதிவு!

 
சமந்தா

இரண்டாவது திருமணம் செய்து கொள்வீர்களா என நடிகை சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியதும், அதற்கு நடிகை சமந்தா கொடுத்துள்ள பதில்தான் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி, வைரலாகி வருகிறது. 

நடிகர் நாகசைதன்யாவுடனான திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக நடிகை சமந்தா கடந்த 2021ம் ஆண்டு அறிவித்தார். அதன் பிறகு, சினிமாவில் கவனம் செலுத்தி வந்தவருக்கு மையோசிடிஸ் எனும் தசை குறைபாட்டு நோய் ஏற்பட்டது. இதற்காக சமந்தா சினிமாவில் இருந்து பிரேக் எடுத்திருக்கிறார். தன்னுடைய பிசினஸ், மனம் ரிலாக்ஸாக ஆன்மிக பயணம், டிராவல், புதிதாக ஆரம்பித்தத் தயாரிப்பு நிறுவனம் என பிஸியாக இருப்பவர் அவ்வப்போது காதல் கிசுகிசுவிலும் சிக்குவதுண்டு.

சமந்தா

அந்த வகையில், சமீபத்தில் இவரது ‘குஷி’ படம் வெளியானபோது நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார் சமந்தா. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக நடித்திருந்ததால் அப்படி பேசப்பட்டது. அதன் பிறகு அந்தப் பேச்சும் அமைதியானது. பின்பு, சமந்தா இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளப் போகிறார் என செய்தி வெளியானது. இந்த நிலையில்தான், ‘மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என்றாவது நினைத்திருக்கிறீர்களா?’ என ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதற்கு சமந்தா, புள்ளி விவரம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதன்படி திருமணம் தவறான முடிவு என தெரிவித்துள்ள அவர், 2023ம் ஆண்டு நிலவரப்படி முதல் திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து சதவீதம் 50 என்றும், இரண்டாவது திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து சதவீதம் 67 எனவும் மூன்றாவது திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து சதவீதம் 73 என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தனக்கு இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் ஐடியா சுத்தமாக இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் சமந்தா.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web