உஷார்... இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.50 கோடியைத் தாண்டியது!

 
கொரோனா

ரொம்பவே பாதுகாப்பா இருங்க மக்களே... மீண்டும் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. சமீபமாக கேரளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் இன்னும் பயமுறுத்துகிறது. திருவாரூரில் 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு வந்திருப்பது மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,50,04,142 ஆக அதிகரித்துள்ளது.

Corona India

கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,33,310 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 200 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 4,44,69,536 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,296 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 20,860 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 93,53,15,761 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Corona India

இதுவரை 220.67 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web