உஷார்... பொங்கல் கொண்டாட்டங்கள்... தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 50,000 போலீசார்... இதைச் செய்தால் கடும் நடவடிக்கை!

 
தீபாவளி போலீசார் பாதுகாப்பு கண்காணிப்பு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இப்போதில் இருந்தே களைக்கட்ட துவங்கியுள்ளது. நேற்று பொங்கல் விடுமுறையை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர் நோக்கி புறப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் 50,000 போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் புத்தக திருவிழா, சென்னை சங்கமம், பொருட்காட்சி என்று ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றன. அதே போன்று ஜல்லிக்கட்டு, பொங்கல் திருவிழாக்கள் என்று தமிழகம் முழுவதுமே மக்கள் கொண்டாட்ட மனநிலையில் இருக்கின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், சந்தைகள், கோயில்கள், சுற்றுலா தலங்கள், கடை வீதிகள், பேருந்து, ரயில் நிலையங்கள் என மக்கள் நெருக்கடி அதிகம் இருக்கும் இடங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொங்கல்

பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்கள் கடைவீதிகளில் துணிகள் பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதும் என்பதால் அத்தகைய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெரிசல் மற்றும் வாகன விபத்து ஏற்படாமல் தடுக்க நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட, மாநகர காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போலீசார் கலவரம் காவல்துறை மறியல் போராட்டம்

மதுரை, கோவை, கரூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மற்றும் கோயில் திருவிழாக்களின் போதும், காணும் பொங்கல் அன்றும் சுற்றுலா தலங்கள் மற்றும் நீர்நிலைகளில் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போதிய அளவில் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web