தங்கம் விலை கொஞ்சம் குறைந்தது! மேலும் குறையுமா?

 
தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

தொடர்ந்து அதிகரித்து வரும் ஆபரண தங்கத்தின் கொஞ்சம் குறைந்த நிலையில், மேலும் குறைய வாய்ப்புள்ளதா என்று இல்லத்தரசிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். பங்கு சந்தை மீண்டும் மீள துவங்கியுள்ளது, தங்கத்தின் இந்த விலை இறக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இன்றைய விலை நிலவரப்படி சென்னையில்  ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு  ரூ10 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5640க்கும் , சவரனுக்கு ரூ 80 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை   ரூ.45120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்றைய விலை  நிலவரப்படி  ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ.80.20க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 அதிகரித்து ரூ.80,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

தங்கம்

சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்திற்கு பிறகு தங்கத்தின் மீதான சேமிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தங்கம் தான் நடுத்தர மக்களின் மிகப்பெரிய சேமிப்பு பெட்டகமாக காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் அதற்கான  மவுசே தனி தான். இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது மிகப்பெரிய சேமிப்பாக இருந்து வருகிறது. ஏறும் போது இரட்டை இலக்கத்தில் ஏறி இறங்கும் போது ஒற்றைப்படை இலக்கத்தில் இறங்கி முதலீட்டாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழகம் முண்ணனியில் இருந்து வருகிறது. அதிலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  அதிலும் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

தங்கம்
நிதி நெருக்கடியின் போது தங்கத்தை விற்று பணமாக்கி கொள்ளவும் முடியும். தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது. இது தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாற்றி வைத்துக் கொள்வதும் உண்டு.  அதனால் தான் குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.70க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ77700க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web