கார்த்திகை முடிஞ்சுடுச்சு... காய்கறிகளின் விலை குறையுமா? இன்றைய விலை நிலவரம் என்ன?

 
கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை! மக்களே தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!

புரட்டாசி மாதத்தில் காய்கறிகளின் விலை எல்லாம் விண்ணைத் தொடும் அளவுக்கு உயரந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியதும், மீண்டும் கார்த்திகை மாத ஐயப்ப சீசனையொட்டி விலை அதிகரிக்க துவங்கியது. சாம்பார் வெங்காயம், இஞ்சி, பூண்டு எல்லாம் கிலோ இரட்டை சதத்தைத் தொட்டு அதிர்ச்சியளித்த நிலையில், தற்போது கார்த்திகை மாதம் முடிவடைந்துள்ள நிலையில், காய்கறிகளின் விலை குறையுமா என்கிற எதிர்பார்ப்பு இல்லத்தரசிகளிடையே ஏற்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறி வரவழைக்கப்பட்டாலும் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தே வருகின்றது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனையாகிறது.

கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 33 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

Koyambedu Market

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 8 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை 100 கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Koyambedu Market

புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும்,  இஞ்சி ஒரு கிலோ 80 முதல் 250 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web