ரொம்ப ஈஸியா கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம்! இதைச் செய்து பாருங்க!

 
தொப்பை

நம்  உடலில் சேரும் கொழுப்பில் இரண்டு வகை உள்ளது. ஒன்று கெட்ட கொழுப்பு. இன்னொன்று உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்பு. கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதால் தான் தொப்பை ஏற்படுவதும், இதயத்தின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதும் பிற நோய்களை அழைக்கும் விருந்தாளியாகவும் செயல்படுகிறது. நம் உடலில் சேர்கிற கெட்ட கொழுப்பை ரொம்ப ஈஸியா கரைக்கலாம். இதை அனைவருமே செய்து வர வேண்டும். வருஷந்தோறும் இதய நோய் பாதிப்பால் மரணமடைவோர்களின் எண்ணிக்கை உலகம் முழுக்க அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து கொண்டே போவது தான்.

நம் உடலில் நல்ல கொழுப்புச் சத்தை அதிகப்படுத்துவதற்கு என்ன செய்யலாம்? என்ன செய்ய கூடாது என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம் வாங்க. கொழுப்பு நிறைந்த உணவுகளின் மூலம் வரும் கொழுப்புச் சத்தை உடல் உறுஞ்சுதலைக் குறைக்க உதவுவதில் முக்கிய பங்கு வெந்தய விதைகளுக்கு உண்டு. இது அதிக நார்சத்து கொண்டது. அதில் ஸ்டீராய்ட் சபோனின் எனப்படும் ஒரு அங்கத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கின்றன.

பூண்டு ஸ்லிம் கொழுப்பு உடல்பயிற்சி தொப்பை

இதய சுகாதாரத்திற்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தேவையான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆளி விதையில் நிறைந்ததுள்ளது. வெந்தயத்தைப் போல இந்த விதைகளும் நிறைய நார்சத்து உள்ளடக்கியது.

பூண்டு எல்.டி.எல் கொழுப்பை குறைத்து, ரத்த அழுத்தம் உயர்வதைக் தடுக்கிறது என்று ஆய்வில் கண்டறிந்துள்ளன. மேலும் மாரடைப்பு மற்றும்  பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைத்து, தமனிகள் சுவர்களில் தகடு படிவதைத் தவிர்க்கிறது. 

மேலும், பாதாம், பிஸ்தா, ஹெசல் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற கொட்டைகள் ஆரோக்கியமாக தமனிகளை வைத்திருக்க உதவுகின்றன. நார் சத்துக்குக்கும் ஒரு மற்றும் பீட்டா குளுக்கான் என்று ஒரு கலவைக்கும் சிறந்த ஆதாரமாக ஓட்ஸ் விளங்கின்றன. இவை இரண்டும்  ஒன்றாக செயல்பட்டு, எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பு அளவு குறைய வைக்கின்றன. 

 ஸ்லிம் கொழுப்பு உடல்பயிற்சி தொப்பை

பீன்ஸில் நிறைய நார்சத்து உள்ளடக்கியது மற்றும் அது கொழுப்பின் அளவையும், உறிஞ்சுதல் விகிதத்தையும் குறைக்க உதவுகிறது. காலை உணவாகச் சிறுதானியங்களை சேர்த்து வந்தால் நீண்ட நேரம் பசி எடுக்காது. எனவே உடலில் கெட்ட கொழுப்பு  சேர்வது முற்றிலுமாகத் தடுக்கப் படுவதுடன், அதில் உள்ள நார்ச்சத்து கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பினை கரைப்பதில் நாம் வீட்டில் அடிக்கடி பயன் படுத்தும் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கின்றது. இஞ்சியில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட் கெட்ட கொழுப்பினைக் கரைக்க உதவுகின்றது. அரைக் கரண்டி இஞ்சிப் பொடியைச் சுடுநீரில் கலந்து  தேன் சேர்த்துப் பருகினால் இரத்தத்தில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்படும்.

அதே போல், இலவங்கப் பட்டையுடன் சம அளவில் மிளகு, வேப்ப இலை சேர்த்து அரைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் இரண்டு கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தீங்கு தரும் கெட்ட கொழுப்பினைக் கரைக்கலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web