பத்ம விபூஷன் பாடகி பிரபா அத்ரே காலமானார்! இந்துஸ்தான் இசையுலகிற்கு பேரிழப்பு!

 
பிரபா அத்ரே

பிரபல இந்துஸ்தான் இசை பாடகியும், பத்மவிபூஷன் விருது பெற்றவருமான பழம்பெரும் பாடகி பிரபா அத்ரே இன்று காலை காலமானார். பாடகி பிரபா அத்ரேயின் மறைவு திரையுலகத்திற்கு மட்டுமல்லாது இந்துஸ்தான் இசை ரசிகர்களுக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 92.

பிரபா அத்ரே

இன்று காலை, புனேவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது பாடகி பிரபா அத்ரேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார்.

பிரபா அத்ரே

இசையில் டாக்டர் பட்டம் பெற்றவரான பிரபா அத்ரே, கடந்த செப்டம்பர் 13, 1932 அன்று பிறந்தார். கர்நாடக இசையில் நிபுணத்துவம் பெற்றிருப்பது மட்டுமல்லாது, இசையமைப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர் பாடகி பிரபா அத்ரே.

பிரபா அத்ரே

மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இசை குறித்துப் பல புத்தகங்களை எழுதியுள்ளார். 1990 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றது மட்டுமல்லாது, கடந்த 2002 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கெளரவித்தது. இவரது டாக்டர் பிரபா அத்ரே அறக்கட்டளை இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் புனேவில் உள்ள அவரது ஸ்வரமாயி குருகுலம், இசையில் திறமையான மாணவர்களை வளர்த்தெடுத்து வருகிறது. பாடகி பிரபா அத்ரே மறைவுக்குப் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web