பொங்கல் எதிரொலி... ஒரு கிலோ மல்லிகைப் கிலோ ரூ.5,000க்கு விற்பனை!

 
மல்லிகைப்பூ

பொங்கல் பண்டிகை எதிரொலி காரணமாக இன்று காலை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 5000  ரூபாய்க்கு விற்பனையாகி அதிர்ச்சியளித்தது. அதே சமயம் கனகாம்பரம் பூ கிலோ 3000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ கிலோ 2500க்கும் என அனைத்து வகையான பூக்களின் விலையும் ஆயிரங்களைக் கடந்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே அதிக டிமாண்ட் இல்லாமல் இருந்து வந்த பூக்களின் விலை, திடீரென எகிறியது. ஒருகிலோ மல்லிகைப் பூ விலை நேற்று ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்து திண்டுக்கல் மலர் சந்தையில் ஒரு கிலோ ரூ.4000க்கு விற்பனையாகிறது. இத்தனைக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாங்குவதற்கு ஆட்களின்றி பூக்களின் விலை நூறுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து பூக்களின் விலைகளும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு கிலோ மல்லிப்பூவின் விலை ரூ.4,000 வரை விற்பனைச் செய்யப்படுவது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த 2,3 நாட்களுக்கு முன்பு வாங்க ஆள் இல்லாமல் திண்டுக்கல் அருகே பூக்களை வீதியில் கொட்டி விட்டு சென்ற நிலையில் இந்த திடீர் விலையுயர்வு இல்லத்தரசிகளை அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது. 

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் இன்று காலை நிலவரப்படி மல்லிகைப்பூ கிலோ 4000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகிய பூக்கள் கிலோ 2000 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி - 2ஆயிரம், சம்மங்கி, செவ்வந்தி -250, செண்டுமல்லி -100, அரளி -450, பன்னீர் ரோஸ் -300, பட்டன் ரோஸ் - 250க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மல்லிகைப்பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ 3 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. முல்லை மற்றும் பிச்சி பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இதேபோல், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையிலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி மல்லிகை 3 ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை 2 ஆயிரம் ரூபாய்க்கும், பிச்சி மற்றும் மெட்ராஸ் மல்லி 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மலர் பூ மார்க்கெட் சந்தை

பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ள சூழலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  பூக்களின் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள சூழலில் நாளை பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும்.என்று கூறப்படுகிறது. நல்ல விலை கிடைத்திருப்பதால் மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூக்கள் விலை  உயர்ந்துள்ளதால் அதை வாங்குபவர்கள் மிகக் குறைந்த அளவே வாங்கி செல்கின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web