பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு... உடனே முந்துங்க... நாளை நெல்லை வரை இயக்கம்!

 
ரயில்

பொங்கல் பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட திட்டமிடுபவர்களின் வசதிக்காக நாளை முதல் சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை செல்லும் வகையில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை முதல் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக திருநெல்வேலி வரை இயக்கப்படும் பொங்கல் விடுமுறை கால சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறைக்கான ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு கடந்த செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களிலேயே அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்தது.

தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பொங்கல் விடுமுறை தினங்களை சொந்த ஊரில் கழிக்க விரும்பும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ரயில், பேருந்து போக்குவரத்து முன்பதிவு கிடைக்காத பயணிகள், சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்புக்காகக் காத்திருந்தனர். இந்நிலையில், தாம்பரம் - திருநெல்வேலி இடையே நாளை ஜனவரி 11ம் தேதி மற்றும் ஜனவரி13, 16-ம் தேதிகளிலும் திருநெல்வேலியிலிருந்து ஜன. 12, 14, 17-ம் தேதிகளிலும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 18 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 3 ஏசி 3 டயர் கோச்சுகளும், 9 - ஏசி 3 டயர் எகானமி கோச்சுகள், 2 ஸ்லீப்பர் கோச்சுகள், 3 ஜெனரல் செகன்ட் கிளாஸ் கோச்சுகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து இரவு 9.50க்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் காலை 11.15க்கு திருநெல்வேலி சென்றடையும். அதே போல் மறுமார்க்கமாக, திருநெல்வேலியில் இருந்து பகல் 2.45க்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் காலை 3.15க்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 14 மற்றும் 16-ம் தேதிகளில் திருநெல்வேலி வரை சிறப்பு ரயிலும், மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து ஜனவரி 15 மற்றும் 17ம் தேதி ஜன் சதர்ன் விரைவு ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web