தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் மகள் காலமானார்!

 
பாகவதர்

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரும், பழம்பெரும் நடிகரும், பாடகருமான தியாகராஜ பாகவதரின் மகள் சுசிலா உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். 

தமிழ்த் திரையுலகில் ஏழிசை மன்னராகத் திகழ்ந்தவர், முத்துவேல் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜன். ரசிகர்கள் அன்புடன் அவரை எம்.கே.தியாகராஜ பாகவதர். என்றும், எம்.கே.டி என்றும் அழைத்து வந்தனர். தமிழ் சினிமாவின் பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் முதல் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வந்தார். தன்னுடைய பாடல்களாலும் ரசிகர்களிடையே கோலோச்சியவர் தியாகராஜ பாகவதர். 1934ம் ஆண்டு ‘பவளக்கொடி’ என்ற படத்தில் கதாநாயகனாக இவர் அறிமுகமான பாகவதர், நடித்த ‘ஹரிதாஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் அந்த காலத்தில் சுமார் 3 ஆண்டுகள் வரை ஓடியது.

எம்.கே.தியாகராஜ பாகவதர்

இந்நிலையில், இவருடைய மகள் சுசிலா (89) முதுமை காரணமாக, நேற்று (ஜனவரி2) அதிகாலை 3 மணியளவில், சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் காலமானார். தியாகராஜ பாகவதரின் மகன் ரவீந்திரனும் மகள் சரோஜாவும் இயற்கை எய்திவிட்ட நிலையில், தற்போது இன்னொரு மகளான சுசிலாவும் இறந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web