பிரம்மாண்டம்... 60,723 ச.மீ., பரப்பளவு... நாளை திருச்சியில் புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!

 
திருச்சி விமான நிலையம்

நாளை திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு, புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை பிரதமர் மோடி திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். திருச்சி விமான நிலைய ஒருங்கிணைந்த இந்த புதிய முனையம் 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே சமயத்தில் 4,000 சர்வ தேச பயணிகள், 1,500 உள்நாட்டு பயணிகளை கையாள முடியும்.

புதிய முனையத்தின் உள்ளே மேற்கொள்ளப்பட்டு வரும் உள் அலங்காரம். இங்கு புறப்பாடு பகுதியில் 10 வாயில்கள், வருகை பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 40 குடியேற்றப்பிரிவு மையங்கள், 48 செக்-இன் மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 10 இடங்களில் ஏரோ ப்ரிட்ஜ், 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள், 26 இடங்களில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர், 1,000 கார்களை நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், புதிய முனையத்தில், தமிழக கலாச்சார, பண்பாடு மற்றும் திருவிழாக்களை மையமாக கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம் புதிய முனையத்தின் முகப்பில் வண்ணமயமாக பார்ப்போர் கண்களை கவரும் வகையில் உள்ளது. இதேபோல, வருகை, புறப்பாடு, பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், ‘கிரிஹா-4’ தர நிலை கொண்டதாக இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் விமானநிலையத்தின் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.75 கோடி செலவில் 42.5 மீட்டர் உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறை கட்டப்பட்டு வருகிறது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web