மாத வாடகை ரூ.200.. தமிழகம் முழுவதும் தோழி விடுதிகள்... இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!

 
மகளிர் விடுதி

பெருநகரங்களில் தங்குவதற்கு பாதி மாத சம்பளத்தை செலவழிக்க வேண்டியிருப்பது தான் பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதன் பின்னர், மீதி பணத்தில் பாதியை உனவுக்கு செலவழிக்கிறோம். இந்நிலையில், மாத வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நல்ல செய்தியாக அரசு பெண்கள் விடுதிகள் இருந்து வருகின்றன. இன்று ஜனவரி 4ம் தேதி  முதல் தமிழகம் முழுவதும் தோழி விடுதிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கிராமங்களில் இருந்து நகரங்களில்  தங்கி பணிபுரியும் பெண்களுக்காக குறைந்த கட்டணத்தில் தோழி விடுதிகள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்த நிலையில், தமிழகம் முழுவதும் முதல்வரின் அறிவிப்புக்கேற்ப அமைக்கப்பட்டுள்ள தோழி விடுதிகளை இன்று ஜனவரி 4ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்.

இந்த தோழிகள் விடுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வசதி, பார்க்கிங் வசதி, பயோமெட்ரிக் வசதி, இலவச வைஃபை உட்பட  பல அம்சங்கள் நிறைந்துள்ளன. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். 

பெண்களை வேலைக்கு செல்ல ஊக்குவிக்கவும், பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய/மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களில் செயல்படுத்தி வருகிறது. அதில், பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள் திட்டம் மிக முக்கியமானதாக உள்ளது. நம்பகமான மற்றும் வசதியான தங்குமிடங்கள் கிடைப்பதை இந்த திட்டம் உறுதி செய்கிறது. இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு 28 அரசு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெண்கள் விடுதி

கடந்த 1975ம் ஆண்டு முதல், மத்திய/மாநில அரசு நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடும்பத்தை விட்டு வெளியூரில் பணிபுரியும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் மகளிருக்கு உணவுடன் பாதுகாப்பான தங்கும் வசதி அமைத்துக் கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்: மாத வருமானம் சென்னையில், ரூ.25,000/-த்திற்குள்ளும், இதர மாவட்டங்களில் ரூ.15,000/-த்திற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

தோழி தங்கும் விடுதி

தங்கி பயன்பெறும் கால அளவு:

மூன்றாண்டுகள் வரை விடுதியில் தங்கலாம். மூன்றாண்டுகளுக்கு மேல், பயனாளியின் தேவை, தங்கிப் பயிலும் காலத்தில் நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் காப்பாளரின் பரிந்துரையின் பேரில் நீட்டிக்கப்படும்.

மாத வாடகை:

சென்னையில் மாதமொன்றுக்கு  வாடகையாக ரூ.300/ செலுத்த வேண்டும்.  இதர மாவட்டங்களில் ரூ.200/-ம் செலுத்த வேண்டும். உணவு மற்றும் மின் கட்டணத்திற்கான கட்டணங்களைப் பகிர்ந்து  கொள்ள வேண்டும். 

எங்கெல்லாம் விடுதி உள்ளது:

சென்னையில் 7 அரசு விடுதிகளும், காஞ்சிபுரத்தில் 3 அரசு விடுதிகளும், திருச்சியில் 2 விடுதிகளும்  உள்ளன. கோவை, சிவகங்கை, தூத்துக்குடி, கடலூர், தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒரு விடுதிகள் ஏற்கனவே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!