போட்றா வெடிய... ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 4 முதல் ரூ.1000 பொங்கல் ஜாக்பாட்!

 
ரேஷன்

நாளை புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், இந்த பொங்கல் பண்டிகைக்கான கொண்டாட்டம் முதல் இடமாக புதுச்சேரியில் துவங்கியுள்ளது. புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 4ம் தேதி முதல் ரூ.1000 வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

வரவிருக்கும் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இதனால் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 791 அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கடை

இதுகுறித்து புதுச்சேரி அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையினால் செயல்படுத்தப்பட்டு வரும், ஏழை மக்களுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையால் வழங்கப்பட்ட வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் அட்டவணை/பழங்குடியினர் இனமக்கள், மீனவர், நெசவாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவிர புதுச்சேரி ஒன்றியத்தில் உள்ள 1,30,791 வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் ஓர் நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.500 மற்றும் இரண்டிற்கு மேற்பட்ட குடும்ப நபர்களை கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 விதம் நேரடி பணப் பரிமாற்றத்தின் மூலம் 04.01.2024 அன்று பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் ரூ.12.29 கோடி அரசாங்கம் செலவிடுகிறது.

மேலும் புதுச்சேரி பிராந்தியத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தகுதியான பயனாளர்கள் அனைவரது வங்கி சேமிப்பு கணக்கில் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதத்திற்கான உதவித்தொகை செலுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web