பகீர் வீடியோ... ரயில் பெட்டி சாலையில் கவிழ்ந்து விபத்து... அலறிய வாகன ஓட்டிகள்!

 
ரயில் விபத்து

பீகார் மாநிலம், பாகல்பூர் ரயில் நிலையத்தின் அருகே லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட ரயில் பெட்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பீகாரின் பாகல்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே லோஹியா பாலப் பகுதியில் , ரயில் பெட்டியை ஏற்றிச் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து நேற்று விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.


சாலையில் ரயில் பெட்டி கவிழ்ந்ததைத் தொடர்ந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும், உள்ளூர் போலீஸார், ரயில்வே துறை அதிகாரிகள் அங்கு வந்து கூட்டத்தைக் கலைத்தனர். மேலும், ரயில் பெட்டியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ரயில் பெட்டியை ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானது.

இது தொடர்பாக மால்டா கோட்ட ரயில்வே மேலாளர் விகாஸ் செளபே கூறுகையில், “ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள வளாகத்தில் ஒரு உணவகம் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த உணவக நிறுவனம், உணவகத்துக்காக இந்த ரயில் பெட்டியை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டிருந்தது. அடிப்படையில் இது ஒரு சாலை விபத்து வழக்கு" என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை, லக்னோவில் இருந்து அசாமுக்கு ஒரு டிரைலர் லாரியில் விமான பாகம் கொண்டு செல்லப்பட்டபோது, பீகாரின் கிழக்கு சம்பரனின் மோதிஹாரியில் உள்ள பிப்ரகோத்தி பாலத்தின் அடியில் அந்த விமான பாகம் சிக்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரயில் பெட்டி சாலையில் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web