கண் எரிச்சலே இருக்காது... இனி வெங்காயத்தை இப்படி கட் பண்ணிப் பாருங்க!

சமையலில் வெங்காயத்தின் தேவை மிக மிக அவசியம். நாம் சமைக்கும் பொருட்களில் கிருமி நாசினியாக செயல்படுகிறது. அத்துடன் சுவை கூட்டலுக்கும் முக்கிய காரணம் வெங்காயம் தான். வெங்காயத்தின் அளவை கூட்டினாலே சுவை கூடிவிடும். ஆனால் சிலருக்கு இந்த வெங்காயத்தை கண்டாலே பிடிக்காது. காரணம் இந்த வெங்காயம் வெட்டும் போது பெரும்பாலான மக்களுக்கு கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும். இந்த கண்ணீர் உங்கள் கண்களில் இருக்கும் அழுக்கை வெளியேற்றும் எனக் கூறுவர். கண்களில் கண்ணீரே இல்லாமல் வெங்காயத்தை வெட்ட உதவும் சில எளிய கிச்சன் டிப்ஸ்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வெங்காயத்தை வெட்டும்போது கண்ணீரைக் குறைப்பதற்கான எளிதான வழிகள் :
வெங்காயத்தை வெட்டுவதற்கு முன்பு ப்ரிட்ஜில் வைத்து குளிர்விப்பது. வெங்காயத்தை வெட்டுவதற்கு முன்பு சுமார் 15 நிமிடங்கள் முன் அதை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். குளிர்ந்த வெப்பநிலை கண்ணீரை ஏற்படுத்தும் எரிச்சலூட்டும் சேர்மங்களின் வெளியீட்டை மெதுவாக்குகிறது.
ஒரு மந்தமான கத்தி வெங்காய செல்களை நசுக்கி, கண்ணில் அதிக அளவு நீரை வெளியேற்றி விடும். வெங்காயத்தை வெட்டும்போது கூர்மையான கத்தியைப் பயன்படுத்தலாம்.
மின்விசிறியை சுவிட்ச் ஆன் செய்து விட்டு வெங்காயத்தை வெட்டினால் அந்தக் காற்று வெங்காய புகையை அகற்றி விடும்.
சிலர் வெங்காயத்தை வெட்டும்போது வெட்டும் பலகையின் அருகே மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பது வழக்கம். வெங்காயத்தால் வெளியிடப்படும் சில சேர்மங்களை அந்த மெழுகுவர்த்தியின் தீப்பிழம்பு எரித்து, கண்ணீரைத் தடுக்க உதவும். ஓடும் தண்ணீரின் கீழ் வெங்காயத்தை வெட்டுவது கண்ணீரைக் குறைக்க மற்றொரு சிறந்த வழியாகும். வெங்காயத்தால் வெளியிடப்படும் எரிச்சல்களைக் கழுவ இந்த நீர் உதவும்.
வெங்காயத்தை வெட்டும்போது கண்ணாடிகளை அணியலாம். இது சற்று முட்டாள்தனமாகத் தோன்றலாம், ஆனால் வெங்காய புகையிலிருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்கவும் கண்ணீரைத் தடுக்கவும் இது ஒரு சிறந்த வழியாக கருதப்படுகிறது.
இதில் ஏதாவது ஒரு வழியை ஃபாலோ செய்து எரிச்சலின்றி வெங்காயத்தை வெட்டித் தள்ளுங்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!