திருப்பதியில் 2023 வருட காணிக்கை வசூல் ரூ.1,398 கோடி!

 
திருப்பதி

கடந்த 2023ல் நிகழ்ந்த நிகழ்வுகளை பலரும் பதிவிட்டு வரும் நிலையில், 2023ல் உலகின் பணக்கார கடவுளாக மீண்டும் கெத்து காட்டியிருக்கிறார் வெங்கடாசலபதி. கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1,398 கோடி பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் அருள்பாலிக்கும் ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் முடி காணிக்கை மட்டுமல்லாது தங்களது வேண்டுதல்களுக்காக பொன், பொருள் என காணிக்கை செலுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

உலகில் மிகவும் பணக்கார கோயில்களில் ஒன்றாக திருப்பதி ஏழுமலையான் கோயில் இருந்து வருகிறது. இந்நிலையில் 2023-ஆம் ஆண்டில் வசூலான காணிக்கை குறித்த தகவலை திருப்பதி தேவஸ்தானம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி கடந்த ஒரு வருடத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1,398 கோடி பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஜூலையில் 129 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக நவம்பரில் 108 கோடி ரூபாயும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.

ஒரே ஆண்டில் 2.52 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்

இதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் காணிக்கை வசூல் கடந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரே ஆண்டில் 2.52 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web