நாளை சனிப்பெயர்ச்சி... திருநள்ளாறில் 24 மணி நேரமும் தரிசனம்... சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

 
சனி சனிப்பெயர்ச்சி திருநள்ளாறு

நாளை சனிப்பெயர்ச்சி  விழாவினையொட்டி திருநள்ளாறு சனீஸ்வர ஆலயத்தில் 24 மணி நேரமும் தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருநள்ளாறு வரும் பக்தர்கள் வசதிக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நாளை 20-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த சுமார் 1,500 போலீஸார் மற்றும் தன்னார்வலா்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக பணியமர்த்தப்படுகிறாா்கள். 

சனீஸ்வர பகவான்

திருநள்ளாறு உள்ளிட்ட 13 இடங்களில் வாகனம் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தத்திலிருந்து கோயிலுக்கு செல்ல இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. விழாவையொட்டி நாளை டிசம்பர் 20ம் தேதி காலை 6 முதல் 21ம் தேதி காலை 6 மணி வரை கோயில் நடை சாத்தப்படாது.

தரிசனத்துக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப் லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட்டில் பக்தரின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். க்யூ ஆா் கோடு வசதி உள்ளதால், அதனை ஸ்கேன் செய்யும்போது கியூ (வரிசை) எங்கிருந்து தொடங்குகிறது என்ற விவரம் தெரியவரும். 

திருநள்ளாறு

முதலுதவிக்கு புதுச்சேரி, காரைக்கால் மருத்துவமனை அல்லாமல் மீனாட்சி மிஷன், விநாயகா மிஷன் மருத்துவமனை நிர்வாகத்தினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.  தமிழகம், ஆந்திரம், கா்நாடகத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்புப் பேருந்துகள்  இயக்க அந்தந்த  நிா்வாகத்தினரை கேட்டுக்கொண்டுள்ளோம். சிறப்பு ரயில் இயக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளில் குறை எதுவும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web