அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவை அடுத்து வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் கிடையாது... தேர்தல் ஆணையம் விளக்கம்!

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதி சிட்டிங் எம்எல்ஏவாக இருந்தவர் அமுல் கந்தசாமி. இவர் ஜூன் 21ம் தேதி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் காலமானார். இந்தியாவை பொறுத்தவரை ஒரு சட்டமன்றத் தொகுதி காலியானால் அடுத்து 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் வால்பாறை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வால்பாறை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய ஓராண்டுக்குள் எம்எல்ஏ மறைந்தால் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என விளக்கம் அளித்துள்ளது.
தமிழக சட்டமன்ற பதவிக்காலம் மே 9-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் தேவை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!