அதிர்ச்சி... காட்டெருமை முட்டியதில் வனக்காப்பாளர் பலி!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் தண்ணீர்பந்தல் பகுதியில் வசித்து வருபவர் 45 வயது அசோக்குமார் . இவர் கோவை வனக்கோட்டத்தில் வனக்காப்பாளராக பணிபுரிந்து வந்தார். அசோக்குமார் மார்ச் 10ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தோளம்பாளையம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை அசோக்குமாரை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரது சத்தம் கேட்டு வந்த அந்த பகுதியினர் மற்றும் வனப்பணியாளர்கள் உடனடியாக அவரை மீட்டு சீலியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அசோக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!