அதிர்ச்சி... ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த கோவை இளைஞர் கைது!

 
கஞ்சா
 


மேற்குவங்க மாநிலம் சாலிமரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த கோவையைச் சேர்ந்த இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான ரயில்வே போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேற்குவங்க மாநிலம் சாலிமரில் இருந்து கிளம்பிய எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 1வது நடைமேடைக்கு வந்து சேர்ந்தது.

இளம் நடிகர் கைது

அந்த ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் மீது ரயில்வே போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்த போது, ரயில்வே போலீசாரிடம் இளைஞர் முன்னுக்குபின் முரணாக பேசினார். உடனடியாக அவரது பையை சோதனைச் செய்ததில், அதில் 10 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இந்த கஞ்சா பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம்.

இதனையடுத்து அந்த இளைஞரைக் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தபோது, அவர் கோவையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (26) என்பதும், ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் இருந்து ரயிலில் கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்ததும், இந்த கஞ்சா பொட்டலங்களை மதுரை கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. 

கைது

இதனையடுத்து அவரைக் கைது செய்து, 10 கிலோ கஞ்சா பொட்டலங்களை அவரிடம் இருந்து பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web