இன்று மாசி பெளர்ணமியில் இதைச் செய்தால் மாங்கல்ய பலம் கூடும்.. வழிபடும் முறைகளும், பரிகாரங்களும்!

அமாவாசை தினங்களை விசேஷமாக முன்னோர்களுக்கு திதி கொடுத்து, பயபக்தியோட கடந்து செல்கிற நாம் பெளர்ணமி தினங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. பெளர்ணமி நாள் ரொம்பவே விசேஷமானது. இந்த தினத்தில் அம்பிகையை மனதில் வேண்டி வழிபாடு செய்வதும், பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும். பெளர்ணமி தினத்துக்கு அத்தனை சக்தி உண்டு. பெளர்ணமியில் சக்தியின் அருளை முழுமையாக பெறலாம்.
பௌர்ணமி நாளில் வீட்டிலும், குலதெய்வ கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். பௌர்ணமியில் அம்மன் கோவில்களில் விளக்குப் பூஜை, அன்னதானம், சிறப்புப் பூஜைகள் செய்யப்படும்.
வீட்டில் வழிபடும் முறை
பௌர்ணமி தினத்தில் மாலை நேரத்தில் பெண்கள் இல்லத்தில் விளக்கேற்றி இயன்ற நைவேத்தியம் படைத்து குங்குமம் அல்லது மஞ்சள் கொண்டு 108 முறை அர்ச்சிக்க வேண்டும்.
இப்படி செய்வதால் மாங்கல்ய பலம் கூடும். நீடித்த ஆயுளும், ஆரோக்கியமும் கிட்டும். சந்தானப் பேறு, தனலாபம் பெருகும். கல்வியில் மேன்மை அடையலாம். அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து, அருகில் உள்ள அம்மன் ஆலயத்துக்கு சென்று பெளர்ணமி நாளில் குங்கும அர்ச்சனை செய்து வாருங்க. உங்களோட மாங்கல்ய பலம் கூடும். வேண்டி நிற்கும் வரம் கிடைக்கும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!