உஷார்... இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதி மின்சார ரயில் சேவை ரத்து!

சென்னையின் பொதுப்போக்குவரத்து சேவைகளில் குறிப்பிடத்தக்கது மின்சார ரயில்கள் தான். இந்த ரயில்கள் அவ்வப்போது பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரையும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரையும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்பவர்கள் வியாபாரிகள் என லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
அதன்படி பொன்னேரி - கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று மார்ச் 13ம் மற்றும் மார்ச் 15ம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35, சென்ட்ரல் - சூலுார்பேட்டை காலை 8.35, 10.15, பகல் 12.10, பிற்பகல் 1.05 மணி இந்த ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. காலை 9.40, பகல் 12.40 மணிக்கு சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சூலுார்பேட்டை - நெல்லுார் மாலை 3.50, சென்ட்ரல் - ஆவடி இரவு 11.40 மணி ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் காலை 9.55, காலை 11.25, பகல் 12.00 மணி ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது .கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை ரயில் காலை 10.55க்கும், மாலை 6:45 மணி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 11.45, பிற்பகல் 1.00, 1.15, 2.30, மாலை 3.15, 3.10, இரவு 9. 00 மணி வரை உள்ள ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன அதே நேரத்தில் செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி, காலை 9.55 மணி ரயில் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும், கும்மிடிப்பூண்டி - தாம்பரம், மாலை 3.00 மணி ரயில் கடற்கரையில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!