திடீரென குறுக்கே பாய்ந்த மாடு... காரில் மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மரணம்!

 
மோகன்

திடீரென சாலையின் குறுக்கே மாடு ஒன்று புகுந்ததால், மாட்டின் மீது மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தைத் திருப்பிய இளைஞர் காரில் மோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாகூர், கன்னியக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன். இவரது மகன் 26 வயது மோகன்ராஜ். இவர் கோர்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து  வருகிறார். இந்நிலையில், தனது சொந்த வேலையாக தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவர், மாலை 6:30 மணிக்கு  வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

மாடு

முல்லோடை - குருவிநத்தம் சாலையில், இருசக்கர வாகனத்தில்  வந்திருந்தார். அப்போது, பரிக்கல்பட்டு பகுதியில், சாலை சந்திப்பில் மாடு ஒன்று திடீரென இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ், எதிர்திசையில் வந்த காரின் மீது விழுந்து படுகாயம் அடைந்தனர். 

மாடு

விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், மோகன்ராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web