தொகுதி மறுசீரமைப்பு கண்டனம்... மார்ச் 22ம் தேதி ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ரேவந்த் ரெட்டி ஒப்புதல்.!

 
ஸ்டாலின்

மத்திய அரசு நாடு முழுவதும் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என அறிவித்திருந்த நிலையில் அதற்கு எதிராக சென்னையில் மார்ச் 22 ம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு பெரும் நோக்கில் திமுக பிரதிநிதிகள் குழு, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன்பட்நாயக், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

முதல்வர் ஸ்டாலின்

அதன் தொடர்ச்சியாக இன்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.அமைச்சர் கே.என்.நேரு, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி  டெல்லியில் சந்தித்து அழைப்பு விடுத்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசினார் முதல்வர் ரேவந்த் ரெட்டி. தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கான அழைப்பை ஏற்று தெலுங்கானா முதல்வர்  ரேவந்த் ரெட்டி, “மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை ஏற்க முடியாது. மிக முக்கியமான பிரச்னையை கையில் எடுத்துள்ள தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகள். நடக்கப்போவது தொகுதி மறுசீரமைப்பு அல்ல, 

 முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாறாக தென்னிந்தியாவின் தொகுதிகளை குறைக்கும் நடவடிக்கை. பாஜக-தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான மத்திய அரசு தென் மாநிலங்களுக்கு எதிராக சதி செய்து வருகிறது. எந்த விலை கொடுத்தாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். பாஜக பழிவாங்கும் அரசியலைச் செய்கிறது.தொகுதி மறுசீரமைப்பின் ஆபத்தை உணர்ந்து தமிழ்நாடு முதல்வர்  ஸ்டாலின் சிறப்பான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு குறித்து  மு.க.ஸ்டாலின் கூட்டும் கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடத்தில் அனுமதி பெற்று பங்கேற்பேன்” எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web