தொழிலதிபர்களிடம் பணமோசடி... போலி வருமான வரித்துறை அதிகாரி கைது!

 
தொழிலதிபர்களிடம் பணமோசடி... போலி வருமான வரித்துறை அதிகாரி கைது!
 

திண்டுக்கல் மாவட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி தொழிலதிபர்களிடம்  பணம் பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டியில் வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி பணம் பறிக்க முயன்ற 75 வயது முதியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் கே.சந்திரசேகரன் (75). இவர் மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் செங்கல் சூளை நடத்தும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம், தன்னை வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி பணமோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டிக்கு வந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமாருக்கு சொந்தமான சிட் பண்ட் நிறுவனத்துக்கு சென்ற சந்திரசேகரன், அடையாள அட்டையை காட்டி, தான் வருமான வரித்துறை அதிகாரி என்றும், இந்நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். பின்னர் சோதனை நடத்தாமல் இருக்க பணம் கேட்டுள்ளார். 

இளம் நடிகர் கைது

அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஊழியர்கள் உடனடியாக சத்திரப்பட்டி போலீசாருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சந்திசேகரன் மற்றும் அவர் வந்த காரின் ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். 

போலீசாரின் தொடர் விசாரணையில், பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறித்ததும், சில மாதங்களுக்கு முன் சத்திரப்பட்டியில் தொழிலதிபர் செந்தில்குமார் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்ததை அறிந்து மீண்டும் சோதனை நடக்க இருப்பதாக பணம் பறிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, சந்திரசேகரனை கைது செய்த போலீசார் தொடர்ந்து, விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web