பகீர் வீடியோ... “கைதியை இரும்பு சங்கிலியால் கட்டி போலீஸ் ஸ்டேஷனை சுத்தம் செய்ய வைத்த போலீஸ்காரர்கள்”…!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் போதன் நகரில் செயல்பட்டு வருகிறது அந்த பகுதிக்கான காவல்நிலையம். இந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர் மீது புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அவரை கைது செய்து அழைத்து வந்தனர். கை செய்யப்பட்ட நபரை சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவருடைய கைகளை இரும்பு சங்கிலிகளால் கட்டிவிட்டனர்.
பின்னர் போலீஸ் ஸ்டேஷன் முழுவதையும் சுத்தம் செய்யும்படி அந்த நபரிடம் காவலர்கள் கூறியுள்ளனர்.அந்த நபர் இரும்பு சங்கிலியுடனே ஊர்ந்து சென்று போலீஸ் ஸ்டேஷனை சுத்தம் செய்த நிலையில் அங்கு சென்ற ஒருவர் இதனை வீடியோ எடுத்து வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். மேலும் இது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச் சம்பவத்திற்கு இதுவரை போலீசார் விளக்கம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!