தென்பழனி கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

 
கழுகுமலை பங்குனிஉத்திரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு.நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜை சுப்பிரமணிய பூஜைகள் நடைபெற்றது. 

கழுகுமலை

தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. இதன் பின்னர் கொடி மரத்திற்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

முருகன்

தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 10ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 11ம் தேதி தீர்த்தவாரி, தபசு காட்சி நிகழ்ச்சியும், 12ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் சீர்வாத தாங்கிகள் செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web