பள்ளி வேனில் மாணவிக்கு பாலியல் தொல்லை - ஓட்டுநர் கைது!

 
கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

தனியார் பள்ளி வாகனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. பத்லாபூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்லும் வேனில் இந்த அத்துமீறல் நடந்துள்ளது.

நேற்று மாலை வகுப்புகள் முடிந்து அனைத்து மாணவர்களையும் அவர்களது வீடுகளில் இறக்கிவிட்ட பிறகு, வேனில் கடைசியாக ஒரு மாணவி மட்டும் இருந்துள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட 35 வயது மதிக்கத்தக்க வேன் ஓட்டுநர், மாணவிக்கு வேனுக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

வீட்டிற்குச் சென்ற மாணவி நடந்த விபரங்களைத் தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், சம்பந்தப்பட்ட வேன் ஓட்டுநரைத் தேடிச் சென்று கைது செய்தனர்.

அவர் மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காகவும், விசாரணை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் ஓட்டுநரின் பெயரைப் போலீசார் தற்போது வெளியிடவில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!