பழிக்கு பழி... பைக்கில் சென்ற ரவுடி வெட்டி படுகொலை!

 
கை ராஜா


தஞ்சாவூர் அருகே பைக்கில் சென்றுக் கொண்டிருந்த ரவுடியை, பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக காரில் மோதி சாலையில் தள்ளி கொலைச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் அருகே ஏழுப்பட்டி நடுத் தெருவைச் சேர்ந்தவர் குறுந்தையன்(50). இவர் தனது தோப்புக்கு வழக்கம் போல மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். 

தஞ்சாவூர் தஞ்சை

மோட்டார் சைக்கிளில் ஏழுப்பட்டி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த போது குறுந்தையனைப் பின்தொடர்ந்து சென்ற கார், திடீரென பைக் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் சாலையில் விழுந்த குறுந்தையன், எழுந்து நிற்க முயன்றபோது காரில் இருந்து இறங்கியவர், திடீரென அரிவாளால் குறுந்தையனைக் வெட்டினர். 

இதில் குறுந்தையனின் இவரது அலறலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று அக்கும்பலைப் பிடிக்க முயன்றதில் ஒருவர் சிக்கிய நிலையில் மற்றவர்கள் காரில் ஏறி தப்பிவிட்டனர். 

பலத்த வெட்டுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே குறுந்தையன் உயிரிழந்த நிலையில், இது குறித்து தகவலறிந்து தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார்  சென்று குறுந்தையன் உடலை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பகீர் ரிப்போர்ட்!! கை கால்களை வெட்டி வீசிய 14 வயது சிறுவன்!!

பின்னர் பொதுமக்களிடம் சிக்கியவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் புதுச்சேரி மாநிலம் ஆரோவில் பகுதியைச் சேர்ந்த வடிவேலு(38) என்பதும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல் சரகத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ள குறுந்தையன், கடந்த 2013ல் உலகநாதன், 2014ல் உதயா ஆகியோரை கொலை செய்தவர் என்பதும், அதற்குப் பழிதீர்க்கும் வகையில் குறுந்தையனை திட்டம் போட்டு கொலை செய்ததும் தெரிய வந்தது.

இந்தக் கொலையில் ஏழுப்பட்டியைச் சேர்ந்த ஒத்தக் கை ராஜா மற்றும் அவரது நண்பர்களுக்கு தொடர்பு உள்ளதும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web