வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு!

 
மீன் கடை மார்க்கெட் அசைவம்

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்ந்தது. மீன்கள் வாங்குவதற்காக வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய தொழில்களில் ஒன்றாக மீன்பிடித்தல் உள்ளது. தூத்துக்குடி மாநகரின் வர்த்தகத்திலும் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மீன்

தற்போது தமிழக கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. எனினும் நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலையில் கரைக்கு திரும்பினர். ஆனால் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்த நாட்டுப்படகு மீனவர்களுக்கு போதிய மீன்பாடு இல்லாததால், மீன்களின் வரத்து குறைந்தது.

மீன் இறைச்சி தூத்துக்குடி துறைமுகம்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நிலையில், மீன்கள் வாங்குவதற்காக திரேஸ்புரம் நாட்டுப்படகு துறைமுகத்தில் பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டு மீன்களை ஏலம் எடுத்து வாங்கியதால் அவற்றின் விலை உயர்ந்தது.

சீலா மீன்கள் ஒரு கிலோ ரூ.1,600 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. அதுபோல் விளை மீன், ஊழி, பாறை மீன்கள் கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரையும், நண்டு கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. ஐயிலை மீன் ஒரு கூடை ரூ.3,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையானது. விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?