“I QUIT...” காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்... கல்லூரி மாணவி தற்கொலை!

தான் காதலித்து வந்தவன், தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தத்திற்கு தயாரான நிலையில், ‘நான் விலகுகிறேன்’ என்று உருக்கமாக எழுதி வைத்து விட்டு, காதலித்து வந்த கல்லூரி மாணவி தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் சட்டக் கல்லூரியில் பயின்று வந்த 23 வயதான மாணவி ஒருவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், “சட்டக் கல்லூரி மாணவி டேனிஷ் ஆரா. இவர் பல் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பல் மருத்துவர் ஆசாத்தை சந்தித்துள்ளார். அதன் பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. ஆசாத், டேனிஸ் ஆராவை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
தற்போது வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்காக நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஆரா தனது அறையில் உள்ள கண்ணாடியில் லிப்ஸ்டிக்கால்” I QUIT” என எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஆராவின் குடும்பத்தினர், ஆராவை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசாத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியதாக கூறுகின்றனர்.
அவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி வேறொரு பெண்ணை நிச்சயம் செய்ததால் ஆரா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துள்ளார் என தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பல் மருத்துவர் ஆசாத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!