”உங்களால் மட்டுமே சாத்தியம்”!! 100 நாள் வெற்றிக் கொண்டாட்டத்தில் “லவ் டு டே”!!

 
லவ் டு டே

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளியான லவ் டு டே திரைப்படம் அப்போதைய டிரெண்டாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  இதனை  இப்போதைய  லேட்டஸ்ட் ட்ரெண்டில் புத்தம் புது காப்பியாக மீண்டும் புது லவ் டு டே வெளியாகியுள்ளது.இந்த படம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில்  ‘கோமாளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு தற்போது  ‘லவ் டுடே’ படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

வெறும் 9 கோடியில் தயாரான லவ் டுடே திரைப்படம் 100 நாட்களில் 80 கோடி வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்திருக்கிறது. இதில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி செல்போனை மாற்றிக் கொள்வதால் காதலர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினையை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டது.

லவ் டு டே

இளசுகள் விரும்பும் வகையில் மிகவும் எதார்த்தமான கதையைக் கொண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இவருடன் இப்படத்தில் இவானா, சத்யராஜ், யோகி பாபு, ராதிகா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது.

2022 நவம்பர் 4-ம் தேதி வெளியான இந்த படம் இன்றுடன் 100வது நாளை எட்டியுள்ளது. மேலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான தியேட்டர்களில் மட்டும் அல்லாமல் பிற தியேட்டர்களிலும் இந்த படம் 100வது நாள் வரை ஓடி இருக்கிறது. இதனால் லவ் டுடே தமிழகம் முழுவதும் இரண்டாவது ரவுண்டு ஓடி சாதனை படைத்துள்ளது.



படம் 100 நாட்களை கடந்தையடுத்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “லவ் டுடே 100 நாட்கள் திரையரங்குகளை நிறைவு செய்கிறது உங்கள் அனைவரின் அன்பினால் மட்டுமே ஒரு மாபெரும் வெற்றி சாத்தியம், எங்களுடன் நின்று, எங்களுக்காக வேரூன்றி, இந்தப் படத்தை ஒரு கல்ட் கிளாசிக் ஆக்கியதற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web