தொடரும் கொடூரம்… 300 நாய்கள் விஷம் வைத்து கொலை!

 
நாய் நாய்கள் தெருநாய்

தெலுங்கானா மாநிலத்தில் மேலும் 300 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜக்தியால் மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. சாலையோரம் மற்றும் திறந்த வெளிகளில் நாய்களின் உடல்கள் குவிந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வெறி நாய்கள்

விஷம் கலந்த உணவை கொடுத்து நாய்களை கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தகவல் அறிந்ததும் விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

நாய்கள்

தெலுங்கானாவில் ஜனவரி மாதத்தில் மட்டும் இதுவரை சுமார் 900 நாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் இந்த சம்பவங்கள் மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!