ஸ்டாலின், உதயநிதி தொகுதிகளில் 3ல் 1 வாக்காளர் பெயர் நீக்கம்.. தமிழகம் முழுவதும் அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்!
முதல்வர் மு க ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரிலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியான சேப்பாக்கத்திலும் 3ல் ஒரு வாக்காளர் என்கிற எண்ணிக்கையில் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் கடந்த பல தேர்தல்களாகவே ஸ்டாலின் தொடர்ந்து கொளத்தூரில் போட்டியிட்டு வருகிறார்.

சேப்பாக்கம் தொகுதி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொகுதியாக இருந்து வந்தது. மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் 1.03 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதே போன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதியான எடப்பாடியில் 26,375 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

துணை முதல்வர் உதயநிதியின் திருவல்லிக்கேணி தொகுதியில் 89,241 பேர் நீக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் 6,19,777 வாக்காளர்களும், காட்பாடி தொகுதியில் 35,666 வாக்காளர்களும், கிருஷ்ணகிரியில் 1,74,549 வாக்காளர்களர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேனியில் 1,25,739 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சிவகங்கையில் 1,50,828 வாக்காளர்களும், ராமநாதபுரத்தில் 1,17,364 வாக்காளர்களும், ஈரோட்டில் 3,25,429 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
