சரக்கு வாகனம் கவிழ்ந்து 1 லட்சம் முட்டைகள் சேதம் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர்!

 
முட்டை

நாமக்கல்லில் இருந்து முட்டைகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்ததில், ஆயிரக்கணக்கான முட்டைகள் சாலையில் ஓடி வீணாகின.

விழுப்புரம் கெடார் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் நாமக்கல்லில் இருந்து முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை, நாமக்கல்லில் இருந்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு டிரைவர் ரமேஷ் என்பவருடன் விழுப்புரம் நோக்கி சரக்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

காலை 8.30 மணியளவில் விழுப்புரம் அருகே அயினம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது, முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது.

வாகனத்தில் இருந்த சுமார் 20,000 முட்டைகள் உடைந்து சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த குணசேகரன் மற்றும் டிரைவர் ரமேஷ் ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்து நடந்த இடத்தில் முட்டைகள் உடைந்து சிதறிக் கிடந்ததைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், ஓரளவிற்குப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருந்த முட்டைகளைத் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர். உடையாத முட்டைகள் மட்டும் பின்னர் மாற்று வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விபத்தினால் விழுப்புரம்-செஞ்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார், விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!