+1 மாணவியை கடத்தி 25 நாட்கள் நீடித்த கொடூரம்... மும்பை வரை அழைத்து சென்று வாலிபர் வெறித்தனம்!

 
மாணவி பாலியல் இளம்பெண் பலாத்காரம் உல்லாசம்

உத்தரப்பிரதேச  மாநிலத்தில் 17 வயதுச் சிறுமியை வாலிபர் ஒருவர் கடத்திச் சென்று, மும்பை மற்றும் புனே உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று 25 நாட்களுக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தேடுவதை அறிந்ததும் சிறுமியை மீண்டும் உத்தரப்பிரதேசத்திற்குக் கொண்டு வந்தபோது, குற்றவாளியைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

உத்தரப்பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி ஒருவரைக் கடந்த மாதம் 14ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிறுமியைத் தீவிரமாகத் தேடி வந்தனர். நீண்ட தேடலுக்குப் பிறகு, கடந்த 12-ஆம் தேதி சிறுமியைக் கண்டுபிடித்த போலீசார், அவரிடம் நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரித்தனர்.

அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த 21 வயதான பாபுராம் என்ற வாலிபர்தான் சிறுமியைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. பாபுராம், சிறுமியைக் கடத்திச் சென்று மகாராஷ்டிராவின் மும்பை, புனே உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். சுமார் 25 நாட்களுக்கு மேலாகச் சிறுமியைக் கடத்தி வைத்திருந்த பாபுராம், இந்த நாட்களில் தொடர்ந்து பலமுறை அச்சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். போலீஸார் தங்களைத் தேடுவதை அறிந்த பாபுராம், பின்னர் சிறுமியை மீண்டும் உத்தரப்பிரதேசத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் பாபுராம் மீது போக்சோ உள்ளிட்டப் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!