10 துணை வட்டாட்சியர்களுக்குப் பதவி உயர்வு!

 
மதுரை
 


மதுரை மாவட்ட நிர்வாகத்தில் முக்கிய மாற்றமாக, 10 துணை வட்டாட்சியர்கள் தற்காலிக வட்டாட்சியர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதுதொடர்பான உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவின்குமார் வெளியிட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வட்டாட்சியர்கள் வகிக்கும் பதவிகள் குறித்த முழு விவரம் இதோ:

மதுரை

கு.கமலேஷ் (மதுரை டாஸ்மாக் உதவி மேலாளர்) - மதுரை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலக தனி வட்டாட்சியராக நியமனம்.

ஞா.சித்ரகலா (கள்ளக்குடி வட்ட வழங்கல் அலுவலர்) - உசிலம்பட்டி தனி வட்டாட்சியராக நியமனம்.

க.தாணுமூர்த்தி (உசிலம்பட்டி தலைமையிடத்து துணை வட்டாட்சியர்) - மதுரை விமான நிலைய விரிவாக்க தனி வட்டாட்சியராக நியமனம்.

வீ.சுந்தரவேல் (மதுரை மேற்கு தலைமையிடத்து துணை வட்டாட்சியர்) - மதுரை தேசிய நெடுஞ்சாலைகள் அலுவலக தனி வட்டாட்சியராக நியமனம்.

ரா.தாமோதரன் (உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக தலைமை உதவியாளர்) - தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கழகம் (மதுரை) தனி வட்டாட்சியராக நியமனம்.

ச.முகிபாலன் (மதுரை ஆட்சியர் அலுவலக தலைமை உதவியாளர்) - மதுரை நெடுஞ்சாலைகள் அலுவலக தனி வட்டாட்சியராக நியமனம்.

ஆ.நாகராணி (வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியர்) - மதுரை மேற்கு நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியராக நியமனம்.

மதுரை

ச.ந.மகேந்திரபாபு (உதவி இயக்குநர், உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியர்) - மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தனி வட்டாட்சியராக நியமனம்.

அ.பிரேம்கிஷோர் (மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக தலைமை உதவியாளர்) - மதுரை நெடுஞ்சாலைகள் அலுவலக தனி வட்டாட்சியராக நியமனம்.

ஜெ.கார்த்திகேயன் (மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக தலைமை உதவியாளர்) - மதுரை மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் (நில எடுப்பு) தனி வட்டாட்சியராக நியமனம்.

இந்த நிர்வாகப் பதவி உயர்வு மற்றும் நியமனங்கள் மதுரை மாவட்டத்தில் நிர்வாகச் செயல்பாடுகளை மேலும் வேகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!