பெரும் சோகம்... மகா கும்பமேளாவுக்கு சென்ற கார் பேருந்து மீது மோதி 10 பக்தர்கள் பலி!

 
கும்பமேளா

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 50 கோடி பேர் நீராடி இருப்பதாக மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து தினமும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில்  சத்தீஷ்காரின் கோர்பா மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் சிலர் காரில் புறப்பட்டு சென்றனர்.

அவர்களுடைய கார் பிரயாக்ராஜ் நகரில் மெஜா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது நேற்று இரவு பேருந்து மீது  மோதி கோரவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் காரில் பயணம் செய்த  10 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பேருந்தில்  இருந்த பயணிகளில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டு உள்ளது.

கும்பமேளாகும்பமேளா

இது குறித்து  தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று  விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளது. மேலும் பலியானவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது. அத்துடன் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?