10 கிலோ கட்டி, தீராத வயிற்று வலி... 17 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்!

 
சூஸ்
 

17 ஆண்டுகளாகக் குழந்தைக்காகக் காத்திருந்த 41 வயது சூஸ், வயிற்றில் இருந்த 10 கிலோ எடையுள்ள பெரிய கட்டியை அகற்ற அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது அவரையும் மருத்துவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பல ஆண்டுகளாகக் கருத்தரிக்க முடியாததற்கு வயிற்றில் இருந்த கட்டியே காரணம் என சூஸ் நம்பினார். கடும் வயிற்று வலியால் அனுமதிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, உண்மையான காரணம் தெரியவந்தது. அவருக்கு அபூர்வமான வயிற்றுக்குழிக் கர்ப்பம் இருந்தது. கருப்பை காலியாக இருந்த நிலையில், குழந்தை ஈரலுக்கு அருகே வளர்ந்து வந்தது.

இது மிக அரிய மருத்துவ அதிசயம். இத்தகைய கர்ப்பங்களில் தாய் அல்லது குழந்தை உயிரிழக்கும் அபாயம் அதிகம். 30 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அறுவை சிகிச்சை செய்தது. ரியு எனப் பெயரிடப்பட்ட 8 பவுண்ட் எடையுள்ள ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. அதிக இரத்தப்போக்கு இருந்தபோதும், தாயின் உயிரையும் மருத்துவர்கள் காப்பாற்றினர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!