5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி !! ”ரைட் ஆப் ” சிக்கலில் பொதுத்துறை வங்கிகள் ?

 
எஸ்பிஐ


நாட்டின் பொதுத்துறை வங்கிகள், கடந்த ஐந்து நிதியாண் டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வராக்கடன் காண்பித்துள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கிகள் தங்கள் வராக்கடன் / செயல்படாத கடன் தொடர்பான விவரங்களைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவுறுத் தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பார்லிமென்டில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய அரசு தெரிவித்த பதிலில் இருந்து சில விவரங்கள் வந்துள்ளன...

பஞ்சாப் நேஷனல் வங்கி
 நாட்டின் பொதுத்துறை வங்கிகள் கடந்த 5 நிதி ஆண்டுகளில், கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வராக்கடன் மற்றும் செயல்படாத  கடனை சந்தித்துள்ளன.
வங்கிகள் தங்கள் இருப்பு நிலைக் குறிப்பில் இருந்த வராக்க டன் தொகையை, வசூலிக்கும் வகையில், 'ரைட் ஆப்' நடவடிக்கை எடுத்துள்ளன. இந்தத் தொகை ஒட்டு மொத்தமாக 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

பாராளுமன்றம்
எஸ்பிஐ அதிகபட்சமாக 2 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு 'ரைட் ஆப்' செய்துள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கி 92 ஆயிரத்து 339 கோடி ரூபாயை ரைட் ஆப் செய்துள்ளது. அதேநேரத்தில், குறிப்பிட்ட 5 நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் தொகையை மீட்டுள்ளன. இதில், வராக்கடன் என்ற திருப்பப்பட்ட கணக்குகளில் இருந்த சொத்துக்களை விற்று ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதும் அடக்கம்.
 ரைட் ஆப் செய்யப்பட்ட கணக்குகளில் காண்பிக்கப்பட்ட கடன் தொகை, அந்த நிறுவனத்தின் சொத்துக்களை மீட்டு, ஏலம்விட்டு, கடன் தொகை மீட்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web