திருச்சியில் 10 லட்சம் பேர் திரள்வார்கள்... மார்ச் 8ல் திமுக மாநில மாநாடு!
'ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்' முழக்கத்துடன் திருச்சியில் 10 லட்சம் பேர் திரள்கிறார்கள். சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கட்சியின் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் மார்ச் 8ம் தேதி இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.
மார்ச் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருச்சிராப்பள்ளி (தீரர்கள் கோட்டையில்) "ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சம் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற முக்கிய தீர்மானங்கள்: ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 பெண்கள் வீதம் நியமிக்கப்பட்டு, அவர்கள் வீடு வீடாகச் சென்று அரசின் சாதனைகளை விளக்கிப் பரப்புரை செய்ய வேண்டும். இன்று காலை சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை முழுமையாக வாசிக்காமல் வெளிநடப்பு செய்ததைக் கண்டித்து இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்க, இப்போதிலிருந்தே பூத் கமிட்டி பணிகளைத் தீவிரப்படுத்த மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
