தமிழகம் முழுவதும் 10 புதிய பேருந்து நிலையங்கள்!! அரசாணை வெளியீடு!!

 
பேருந்து

போக்குவரத்து துறையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பெண்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகளுக்கு இலவச பேருந்து, பேருந்துகளில் கேமரா என தொழில்நுட்ப வகையிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது தமிழகம் முழுவதும்  10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி நிதி  ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு பேருந்து

இந்த அரசாணையின் படி 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திரூப்பூரில் ரூ. 26 கோடி மற்றும் ஓசூரில் ரூ. 30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி உட்பட  8 நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

அரசுப் பேருந்து

 அதில் திருப்பூர் மற்றும் ஓசூரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்  உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுடன் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கூடலூர் (டி), அரியலூர், வடலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, கொளச்சல் மற்றும் பொள்ளாச்சி பேரூராட்சிகளுக்கும் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web