பள்ளியில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி..!
கனடாவின் வடகிழக்கு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் தாக்குதலாளர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வான்கூவரில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தொலைவில் உள்ள இந்த மலைப்பாங்கான பகுதியில் சம்பவம் நடந்தது. சுமார் 175 மாணவர்கள் பயிலும் மேல்நிலைப் பள்ளியில் இந்த தாக்குதல் நடைபெற்றது.
தாக்குதலில் ஈடுபட்டது ஜெஸ்ஸி வான் ரூட்செலார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பள்ளிக்குள் புகுந்த அவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் உயிரிழந்தனர். பின்னர் அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த பள்ளிக்கு அருகிலுள்ள குடியிருப்பில் அவரது தாயும் சகோதரனும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அவரது குடும்ப பின்னணி மற்றும் மனநிலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்பு சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. கனடாவில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
