பேருந்து - கார் மோதிய விபத்தில் 10 பக்தர்கள் பலி:... மகா கும்ப மேளாவுக்கு சென்ற போது துயரம்!

உத்தரபிரதேசத்தில் கார்-பஸ் மோதிய விபத்தில் கும்பமேளாவுக்கு சென்ற 10 பக்தர்கள் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 10 பேர் கார் ஒன்றில் கும்ப மேளாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
இவர்களது கார் உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் பிர யாக்ராஜ் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த பேருந்து ஒன்று கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் கார் முழுவதுமாக அப்பளமாய் நொறுங்கியது. காரில் பயணித்த பக்தர்கள் 10 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் 19 பேர் படுகாயம் அடைந்தனர். நள்ளிரவில் நடந்த இந்த விபத்து காரணமாக பிரயாக்ராஜ் - மிர்சாபூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர். மேலும் பலியானவர்கள் உடல்களை ஸ்வரூப் ராணி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். பலி யானவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை கும்பமேளாவுக்கு சென்ற ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் 7 பேர் லாரி விபத்தில் சிக்கி உயிரிழதது குறிப்பிடத்தக்கது.
இதே போல் ஆக்ராவை சேர்ந்த கணவன், மனைவி காரில் சென்ற போது லாரி மோதி இருந்தனர். மேலும் ஒரு விபத்தில் ஒடிசாவை சேர்ந்த பக்தர் ஒருவர் பலியாகி உள்ளார். தொடர் விபத்து காரணமாக பக்தர் கள் பலியாவதை தடுக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென உத்தர பிரதேச மாநில போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மகா கும்ப மேளாவில் நேற்று ஒரே நாளில் 92 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர். இதனால் மகா கும்ப மேளாவில் மொத்த பக்தர்கள் வருகை 50 கோடியை தாண்டி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!