உறவினர் போல் நடித்து 10 சவரன் நகை கொள்ளை... பட்டப்பகலில் பயங்கரம்... !

 
சேலம்

தர்மபுரி மாவட்டத்தில்  பட்டப்பகலில்  உறவினரைப் போல் நடித்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார் ஒரு பெண்மணி. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியில் வசித்து வரும் தம்பதி சிவசேகர் மற்றும்  அவரது மனைவி ஜெயந்தி. இருவருமே பாப்பாரப்பட்டியில்   அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

நகை கொள்ளை
 வழக்கம் போல் இருவருமே   பணிக்கு சென்ற நேரத்தில் சிவசேகரின் வயதான தாயார் பெருமா மட்டும் வீட்டில்  தனியாக இருந்தார்.  அவரது வீட்டிற்கு முன் காரில் வந்து இறங்கிய பெண்  சிவசேகரின் வீட்டிற்கு சென்று, உறவினரை போல தந்திரமாக பேசி ஆப்பிள் பழத்தை மூதாட்டிக்கு சாப்பிட கொடுத்தார். அதன் பிறகு  பீரோவில் இருந்த தங்க நகைகளை பட்ட பகலிலேயே சர்வ சாதாரணமாக அள்ளி போட்டுக் கொண்டு காரில் தப்பிச் சென்றார்.இச்சம்பவம் குறித்து  சிவசேகர் காவல்நிலையத்தில் அளித்த புகார் அளித்தார்.

சிறை

இந்தப் புகாரின் அடிப்படையில், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.   பிரபல கொள்ளைக்காரி சேலம் மைதிலி தான்  இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.   வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேலம் மைதிலியை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர் வீட்டில் கைவரிசை காட்டியது மைதிலி தான் என்பது உறுதி செய்யப்பட்டது.  இவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்கு பிறகு  மைதிலியிடமிருந்து 10 சவரன் தங்க நகைகளை மீட்கப்பட்டது.   இதனையடுத்து மைதிலியை   நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி  வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web