சொந்த கிராமத்திற்கு ரூ.100 கோடி நிதியுதவி... குழந்தைகளின் இலவச கல்விக்காக அள்ளிக் கொடுத்த தொழிலதிபர்!

 
மகேந்திரா
 


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் அனைவருமே தரமான கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் இலவச கல்வி வழங்குவதற்காக, தொழிலதிபர் மகேந்திரா மேக் படேல் என்பவர் ரூ.100 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம் நிஸ்ரயா கிராமத்தில் பிறந்தவர் மகேந்திரா மேக் படேல். தொழிலதிபரான இவருக்கு தற்போது 86 வயதாகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவில் முதுகலைப் பட்டம் பெற்ற மகேந்திரா மேக், அமெரிக்காவில் தற்போது நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

மகேந்திரா

இந்நிலையில், தன்னைப் போலவே தனது கிராமத்து மக்களின் கல்வியறிவு பெற்று வாழ்க்கையில் மேலோங்க வேண்டும் என்கிற ஆசையில் தனது சொந்த கிராமத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக சுமார் ரூ.100 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

தற்போது நிஸ்ரயா கிராமத்தில் அதிநவீன உயர்நிலைப் பள்ளியைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த பள்ளியில் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என மேக் படேல் விரும்புகிறார்.

இது குறித்து மகேந்திரா கூறுகையில், 'நான் இந்தியன் வங்கியில் ரூ.75 கோடி பிக்சட் டெபாசிட் செய்து இருந்தேன். தற்போது அந்த பணத்தை நிஸ்ரயா கிராமத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளேன். நிஸ்ரயா கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி இல்லை. குழந்தைகள் மற்ற கிராமங்கள் அல்லது நகரங்களுக்கு படிப்பதற்காக செல்ல வேண்டும். குழந்தைகள் அனைவரும் உயர்கல்வி பெற பள்ளி கட்டி கொடுப்பது எனது கனவு. மாணவர்கள் இலவசமாக கல்வி கற்க வேண்டும்” என்றார். 

மகேந்திரா

கடந்த 6 மாதங்களில் மட்டும் நிஸ்ரயா கிராமத்தை சேர்ந்த 70 ஏழை மாணவர்களுக்கு ரூ.30 லட்சம் வழங்கியுள்ளார். அவர்களின் உயர்கல்வி பி.ஏ., பிகாம் மற்றும் பிசிஏ என பட்டப்படிப்புகளுக்கு மேக் படேல் உதவி செய்து வருகிறார். இவரது தொடர் உதவிகளால் அந்த கிராமத்தில் நல்ல வடிகால் அமைப்பு, சூரிய சக்தியால் இயங்கும் தெருவிளக்குகள், சிசிடிவி  கேமராக்கள், அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி என்று நவீனமாகி இருக்கிறது. இவரை அந்த கிராம மக்கள் கடவுள் போல் பார்க்கிறார்கள். 

எங்கோ அமெரிக்காவில் சாதித்து வசதி வாய்ப்புகளுடன் இருந்தாலும் தன்னுடைய வேரான சொந்த கிராமத்தை மறக்காமல் ரூ.100 கோடி நிதியுதவி அளித்து, கிராமத்தினரின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் மேக் படேலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!