100 நாள் வேலைத் திட்டம்… எடப்பாடியை கடுமையாக சாடிய ஸ்டாலின்!

 
ஸ்டாலின் எடப்பாடி
 

மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றத்தை கைவிடக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களைக் காக்க குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில், டெல்லியை குளிர்விக்க அவர் அறிக்கை விட்டுள்ளார் என கிண்டலடித்தார். “பட்டும் படாமல், தொட்டும் தொடாமல்” அழுத்தம் கொடுக்கும் அரசியல் எனவும் சாடினார்.

எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், 125 நாள் வேலை என்கிற அறிவிப்பு ஏமாற்று வேலை என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார். 100 நாள் வேலை உத்தரவாதம் சட்டமாக இருந்தபோதே, பாஜக ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்ததாக கூறினார். அதற்கான ஊதியம் மற்றும் திட்ட நிதி மாதக் கணக்கில் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

தற்போது விதிகள் மாற்றப்பட்டதால் வேலை கிடைப்பதே அரிதாகிவிட்டது என்றும், நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பெரும் இழப்பை சந்திக்கப்போவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். திட்டச் செலவில் 40 சதவீதத்தை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்பது கடும் சுமை எனவும் கூறினார். கிராமப்புற பெண்கள், ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவது மன்னிக்க முடியாத துரோகம் என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!