காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி - அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் மசோதா!
இந்தியாவில் காப்பீட்டுத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தவும், உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்கச் செய்யவும், காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை (Foreign Direct Investment - FDI) அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான காப்பீட்டுச் சட்டங்கள் (திருத்த) மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தற்போது காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அது 100 சதவீதமாக உயர்த்தப்படும். 100% FDI அனுமதிப்பதால், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நிர்வாக விவகாரங்களை முழுச் சுதந்திரத்துடனும், போதிய பாதுகாப்பு நடைமுறைகளுடனும் மேற்கொள்ள முடியும்.

இதன்மூலம், "2047-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் காப்பீடு" என்ற மத்திய அரசின் இலக்கை அடைவதற்கான திட்டம் மேலும் வலுப்பெறும். இந்த மசோதா மூலம், எளிதில் வர்த்தகம் செய்வது (Ease of Doing Business) மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் மேலும் சில முக்கியச் சீர்திருத்தங்களையும் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. பல நடைமுறைகளும், விதிகளும் எளிமைப்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே இந்த மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்ற அரசு தீவிரமாக உள்ளது. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
