ஆசிரியை வீட்டில் 100 சவரன் நகை பணம், கொள்ளை!

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி புறவடை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் வசித்து வருபவர் ஷேர்லின்பெல்மா. சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வீட்டில் வசித்து வருகிறார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
தனது தாயார் மேரியுடன் ஷேர்லின்பெல்மா வசித்து வந்துள்ளார். மேரி மருத்துவ சிகிச்சைக்காக, வேலூருக்கு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் ஷேர்லின்பெல்மா வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுவிட்டார். பள்ளி முடிந்தபின் மீண்டும் வீட்டுக்கு அவர் திரும்பி வந்தார். அங்கு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த அவரது 70 பவுன் தங்க நகையையும், மேரியின் 30 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1½ லட்சத்தையும் மர்ம கும்பல் திருடிச்சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இச்சம்பவம் குறித்து ஷேர்லின்பெல்மா போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!