ஏர் இந்தியா விமான விபத்து இடிபாடுகளில் 100 சவரன் தங்கநகைகள், ரொக்க பணம் மீட்பு!

 
ஏர் இந்தியா


அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்டு சென்ற விமானத்தில்  பயணம் செய்த 242 பேரில், ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார். விமானத்தின் இடிபாடுகள் சிதறிக் கிடக்கும் பகுதிகளில்  தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதில், 100 சவரனுக்கும் அதிகமான நககைகளும், பணமும் மீட்கப்பட்டு இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

விமான விபத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயம் உடைந்தது... பிரதமர் மோடி வேதனை!  


அகமதாபாத் விமான விபத்து நடந்த சில நிமிடங்களில், அப்பகுதியைச் சேர்ந்த குழு ஒன்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள கட்டுமான தொழிலதிபர் ராஜூ படேல் என்பவர் தலைமையில் இந்த குழு செயல்பட்டு வருகிறது.  விமானம் கட்டிடத்தின் மேல் விழுந்து நொறுங்கிய நிலையில், உடனடியாக களத்திற்கு வந்த அந்த குழு, விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தது.

விமான விபத்து

அத்துடன் இதுவரை இடிபாடுகளில் இருந்து, சுமார் 100 சவரன் தங்க நகைகளை அவர்கள் மீட்டுள்ளனர். மேலும், 80,000 ரூபாய் பணம், போர்ட்டுகள், பகவத் கீதை இவைகளையும் மீட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அந்த நகைகள் ஆவணப்படுத்தப்பட்டு, விபத்தில் உயிரிழந்தவர்களின்  உறவினர்களை அழைத்து, அடையாளம் காணப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார். 
 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது